WELCOME.........

MY POSTS...சரல் என்ற புதிய செயற்கை கோள் 2011-ல் ஏவப்படும்,வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி,ஆறுமுக நாவலர்,நடை - நோய்க்கு தடை!,பருவகால மாற்றங்களும் உலகமயமாதலும்,அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!,டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ( R. P. Sethu Pillai ),செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்,நிலவில் தண்ணீ?ர் இருப்பதற்கு வாய்ப்பில்லை,கைராசியானவர்,தமிழ் கடி ஜோக்ஸ்,எந்திரனை விற்க முயன்ற தந்திரன்!,Cricket,Murali: The man who reinvented spin ,Oldest signs of tool-making foundHominin skulls,Cricket,தேசிய பாதுகாப்பு தினம் : இம்முறை யாழில்,கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்' ,தமிழும் சமயமும்,Jokes & Funny Pictures-Funny Doctor & patient Discussion,அன்னை தெரேசா,தொமஸ் அல்வா எடிசன்,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,குட்டன்பேர்க்,பெஞ்சமின் பிராங்கிளின்,மார்க்கோனி,சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் வாழ்பவர்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்,2590 கோடி ரூபாவுக்கு விற்கப்பட்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு

Wednesday, September 1, 2010

இங்கிலாந்தின் நிதி நெருக்கடி : 7 வயது சிறுவன் ஆலோசனை





இங்கிலாந்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க 7 வயது சிறுவன் ஆலோசனை வழங்கவுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் சிறுவயது கணித மேதையாக மதிக்கப்படும் ஆஸ்கர் செல்பி என்பவரே இவ்வாறு ஆலோசனை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் 'ஜெனரல் சர்டிபிகேட் ஒப் செகண்டரி எஜுகேஷன்' (ஜிசிஎஸ்ஈ) கணித தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். சரே மாநிலம் எப்சம் நகரைச் சேர்ந்த இவர், ஸ்டேம்போர்ட் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்.
ஆஸ்கர், நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைந்த வயதிலேயே மேற்படித் தேர்வில் கலந்து கொண்டார். இதில் முதலிடம் பிடித்து சாதனையும் படைத்துள்ளார். இதனையடுத்தே இங்கிலாந்து அரசு, நிதித்துறை ஆலோசகராக இவரை நியமித்துள்ளது.
இதன்படி, நிதிநெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஆலோசனையை ஆஸ்கர் வழங்கவுள்ளார். இதற்கென வாரத்தில் ஒரு நாளை(சனிக்கிழமை) இவர் ஒதுக்கியுள்ளார்.
"அரசின் 12.46 லட்சம் கோடி 'பட்ஜெட்' பற்றாக்குறையை எப்படித் தீர்க்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு,
"வரி உயர்வு மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது

எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது.ஆப்பிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய பதிப்பை வெற்றிகரமான அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவில் இந்தப் புதிய ஐபோன் - 4ஆம் பதிப்பு வரும் செப்தெம்பரில் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
‘ஐபோன்’ எனும் புதிய வகையிலான தொழில்நுட்பத் தொடர்பு கருவி 2007இல் சந்தைக்கு வந்தன. இதுவரையில் 5 கோடி ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக அறியப்படுகிறது. தற்போது மேலும் பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" சந்தைக்கு வந்துள்ளது.
ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கையடக்க இணைய பேசி எல்லா வகையான ஏந்துகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. iOS 4 எனும் இயங்குதளத்தில் மிகவேகமாக இயங்கும் ஆற்றல் கொண்ட இந்த புதிய கையடக்கப் பேசியில், வீடியோ அழைப்பு, உயர்தரமான கணித்திரை, 5 மெகா பிக்சல் படக்கருவி, லெட் ஃப்ளாச், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு, கம்பியில்லா இணையச் சேவை என ஏராளமான நவினமய சிறப்புத் தன்மைகள் உள்ளன.
முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" வடிவத்தில் மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையத்தில் உலாவவும் முடியுமாம்.
இத்தனைக்கும் மேலாக, தமிழர்கள் அனைவரும் பெருமைபடும் வகையில் ‘ஐபோன் 4’ தமிழில் உள்ள வரிகளை அப்படியே தமிழில் கொடுக்கும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
iOS4இல் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் செல்லினம் எனும் தமிழ்ச் செயலியை வடிவமைத்துச் சாதனைப் புரிந்திருக்கிறார். இதன்வழி தமிழ்மொழியை அடுத்த தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தியிருப்பதோடு, தமிழை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார்.
ஐபோன்-3G, ஐபோன்-3GS மற்றும் ஐபோன்-4 ஆகிய நான்கு வகை ஐபோன் கருவிகளிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஐ-பாட் டச் (iPod Touch) கருவிகளிலும் iOS4 இயங்குதளம் இயங்கும். இந்த இயக்கத்தைப் பெற்ற அனைவருமே தமிழ் வரிகளைத் திரைகளில் அனுபவிக்கலாம். மலேசிய உருவாக்கமான செல்லினத்தைக் கொண்டு தமிழ் வரிகளைக் கோர்த்து, மின் அஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் தமிழ் வரிகளை அனுப்பலாம். மேலும் இந்தக் கருவிகளில் வடிவமைக்கப்பட்ட முகநூல்(Facebook) டிவிட்டர் (Twitter) போன்ற செயலிகளிலும் தமிழ் வரிகளைத் தடையின்றிக் காணலாம்.
நவின தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்மொழியும் செயல்பட முடியும் என்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு நல்ல சான்றாக அமைந்திருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் அதீத வளர்ச்சி

நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் 8.8 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்ட அதிக அளவிலான கலாண்டு வளர்ச்சி இதுவேயாகும்.
உலக பொருளாதாரத் தொய்வு நிலைக்கு முன்பாக இந்தியா கண்ட வளர்சியின் அளவு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவுக்கு அடுத்து வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது.
இந்தியாவின் உற்பத்தித் துறை 12 சதவீதம் வளர்ந்துள்ளது. கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
உலக பொருளாதார மீட்சி குறித்த கவலைகள் நிலவுவதன் காரணமாக இந்தியாவிலும் சில பாதிப்புகள் ஏற்படலாம் என்ற கவலைகள் நிலவுகின்றன.

Thursday, August 12, 2010

செல்வச்சந்நிதி ஆலயத்தின் மகோற்சவ ஆலய நிகழ்வுகள் நேற்று ஆரம்பம்


Wednesday,Aug,11, 2010,10:24am
வரலாற்றுப் புகழ்மிக்க செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ ஆலய நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகியுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 15 தினங்களுக்கு நடத்துவதற்கு படைத்தரப்பு அனுமதி வழங்கியிருக்கின்றது.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் கிழக்குப் புறமான தொண்டமனாறுக் கடல் நீரேரி ஓரமாகவே செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்திருக்கின்றது. இந்த கடல் நீரேரியே கோவிலின் தீர்த்தக் கேணியாகவும் இங்கு அமைந்திருக்கின்றது. இரவு வேளைகளில் அங்கு எவரும் நடமாடக் கூடாது என படைத்தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரவு நேரத்தில் பக்தர்கள் ஆலயச் சூழலில் தங்கியிருப்பதற்கு தற்பொழுது அனுமதி வழங்கியிருக்கின்றது.

சரல் என்ற புதிய செயற்கை கோள் 2011-ல் ஏவப்படும்



சரல் என பெயரிடப்பட்டுள்ள புதிய செயற்கைகோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் .கடல் மற்றும் கடல் ஆழம்சார்ந்த பகுதிகளை இந்த செயற்கை கோள் ஆராயும். இந்த செயற்கைகோள் இந்தியாவின் இஸ்ரோவும், பிரான்சின் தேசிய விண்வெளியும் இணைந்து தயாரித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிருத்விராஜ்சவான் தெரிவித்துள்ளார்.